“இன்னிக்கு நிறைய செல்வங்க கெடைச்சிருக்கு டோய்!”

ராமேஸ்வரம் பெண்களின் பாரம்பர்ய ஓலைமுறை மீன்பிடிப்புவாழ்க்கை எனும் வலைமு.பார்த்தசாரதி - படங்கள் : உ.பாண்டி

திகாலை ஐந்தரை மணி. ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது மார்கழிப் பனி. கடற்கரைக் காற்றும் காலைக் குளிரும் சேர்ந்து உடலைக் கிடுகிடுக்க வைத்தன. இருள் இன்னும் மொத்தமாக விலகிவிடவில்லை. கிழக்கிலிருந்து கிளர்ந்தெழும் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் இருளைக் கிழித்துக்கொண்டு வெள்ளி பூத்திருந்த அலைகளின் மேல் தங்கத்தை வார்த்து ஊற்றிக்கொண்டிருந்தன. அந்தக் காட்சி கண்களுக்குச் சிலிர்ப்பாக இருந்தாலும், ஓர் அச்ச உணர்வையும் அளித்தது. தூரத்தில் அசைந்தாடும் பாய்மரப் படகுகளைத் தவிர அருகே யாரும் இல்லாத தனிமை தந்த அச்சம் அது. ‘சூரிய உதயத்தைப் பார்க்கிற ஆர்வத்துல வந்துட்டோம், இப்போ பயமா இருக்கே’ என்று மனம் ஆற்ற ஆரம்பித்த நொடிகளில், கேட்டது அந்தப் பாடல்.

“ஏலேயெலோ ஏலே ஏலேலோ ஐலசா
ஏலேயெலோ ஏலே ஏலேலோ யாழே...
வாலேலோ வாலே ஏலேலோ நெத்திலி
வாலேலோ வாலே ஏலேலோ திருக்க
ஏலேலோ ஏலேயெலேலோ ஐலசா...
ஏலேயெலோ ஏலே ஏலேலோ யாழே...”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick