ஸ்மார்ட் பொண்ணு... தமிழ்ப் பொண்ணு! - அக்‌ஷயா சண்முகம்

சபாஷ்... சபாஷ்ஆ.சாந்தி

‘`எதிர்பாராமல் கிடைத்திருக்கும் இந்த சர்வதேச வெளிச்சம், என் உற்சாகத்தைப் பல மடங்கு பெருக்கி யிருக்கு’’ - பரவசத்துடன் சொல்கிறார் அக்‌ஷயா சண்முகம். உலகப் புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் 2018-ம் வருடத்துக்கான சுயதொழில் சாதனையாளர்களுக்கான ‘30 அண்டர் 30’ பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சென்னைப் பெண். அப்படி என்ன செய்தார் அக்‌ஷயா?

“எப்பவுமே சேவை அடிப்படையில செய்கிற பிசினஸுக்கு  ஒரு மரியாதை கிடைக்கும். அதுதான் எனக்கும் கிடைச்சிருக்கு” என்கிறவருக்கு வயது 29.  ‘லாம் இன்க்' (Lumme Inc) என்கிற அமெரிக்க நிறுவனத்தில் சி.இ.ஓ பொறுப்பு வகிக்கிறார். புகை, மது அடிமைத்தனங்களிலிருந்து மக்களை மீட்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பச் சாதனங்கள்தாம்,  இவரை ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick