‘‘கேர்ள்ஸ் ஏன் வேற பாத்ரூமுக்குப் போறாங்க?”

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி

‘‘ஒரு குழந்தையை ஆண்பிள்ளை என்றும், பெண்பிள்ளை என்றும் எதன் அடிப்படையில் அடையாளப்படுத்து கிறார்கள் என்கிற கேள்வி இரண்டு வயதிலேயே வரத்தொடங்கிவிடும். அவர்களுக்குப் பாலினம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு அப்போதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. குழந்தை மனதில் சந்தேகங்கள் முளைக்கும்போதே அதற்கான பதில்கள் கிடைப்பது, அவர்களைச் சரியான பாதையில் கொண்டுசெல்லும். பாலினம், பாலுறுப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத குழந்தைகள், தங்களுக்கு வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம் அதைத் தேட ஆரம்பிப்பார்கள். அது அவர்களைத் தடம் மாற வைக்கலாம்” என்று எச்சரிக்கும் சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மீரா, ஆண்பிள்ளையிடம் பாலுறுப்பு சார்ந்த விஷயங்களைப் பெற்றோர் பக்குவத்துடன் பேசுவதற் கான வழிகாட்டல்களைத் தருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick