ஹிட்லர் அழைத்தார்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

வா பிரான் (Eva Braun) தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஹிட்லருக்காகக் காத்திருப்பதிலேயே செலவழித்துத் தீர்த்துவிட்டார்.

`என் தனிமையும் அது தரும் துயரமும் எப்போது நீங்கும்? ஹிட்லர் எப்போது என்னை அழைத்துக்கொள்வார்? என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் அந்தத் தினம் எப்போது வரும்?'

மார்ச் 1945-ல் ஈவாவின் நீண்ட காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அவரை அழைத்துச்செல்வதற்காக ஒரு கார் வந்திருந்தது. ஏறி அமரும்போதே ஈவா உணர்ந்துவிட்டார். இது என்னுடைய வாழ்நாள் பயணம். அநேகமாக, இறுதிப் பயணமும்கூட. அதனால் என்ன? அழைப்பு ஹிட்லரிடமிருந்து அல்லவா வந்திருக்கிறது! மியூனிக்கிலிருந்து பெர்லினை நோக்கி விரைந்து சென்றது அந்த வண்டி.

ஹிட்லரை முதன்முதலில் சந்தித்த நிகழ்வை ஈவா பின்னர் தன் சகோதரியிடம் பகிர்ந்துகொண்டார். அது 1932-ம் ஆண்டு. ஒரு ஸ்டுடியோவில் உதவியாளராக அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார் ஈவா. அலுவலக நேரம் முடிவடைந்துவிட்டது என்றாலும், சில கோப்புகளை அடுக்கி வைப்பதற்காக ஓர் ஏணியின்மீது ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மேல் அதிகாரியும் இன்னொரு நபரும் அலுவலகத்துக்குள் நுழைந்ததை ஈவா கவனித்தார். ‘அவருடைய மீசை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆங்கிலேயர் அணிவதைப் போன்ற பெரிய அங்கியை அணிந்திருந்தார். கையில் ஒரு பழைய தொப்பி. அந்த மனிதன் என் கால்களையே பார்த்துக்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick