முத்தா

தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள் : எஸ்.சாய்தர்மராஜ் - ஓவியம் : ஸ்யாம்

முத்தா இருக்காளே... பெரிய கூத்தாடி. ராம்நாடு ஜில்லாவுல அவளுக்கு இணையான கூத்தாடிங்க யாரும் இல்லை. முத்தாளோட அப்பன் முத்துச்சாமி வாத்தி பெரிய கலைஞன். ஒரு நாடகக் கம்பெனி நடத்துனாரு. அவரை நம்பி நாப்பது அம்பது ஆளுங்க பிழைச்சுக்கிட்டிருந்தாங்க.  கம்பங்காடு முத்துச்சாமி வாத்தி கூத்துன்னா சுத்துப்பட்டு சனங்கள்லாம் வேலை வெட்டியை விட்டுப்புட்டு வண்டி மாடு கட்டிக்கிட்டு வந்திரும். அவ்வளவு பேரு அந்தாளுக்கு.

அந்தக் காலத்துல கூத்துல பொம்பளைங்களே இருக்க மாட்டாங்க. எல்லா வேஷத்தையும் ஆம்பளைங்கதான் கட்டுவாங்க. காரணம், பொம்பளைங்க கூத்துக்குப்போனா கெட்டுப்போயிருவாங்கன்னு ஒரு கதை. அதனால கூத்துக்காரங்களே அவங்க வீட்டுப் பொம்பளைகளை கூத்துல சேத்துக்கிறதில்லை. ஆனா, முத்தாவுக்குக் கூத்துதான் உசுரு. வீட்டுக் களத்துல, கூத்தாடிங்க வேஷம் கட்டி முன்னோட்டம் பாக்குறபோதெல்லாம் கண் இமைக்காம பாத்துக்கிட்டு உக்காந்திருப்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick