``அம்மா இல்லாமல் அடையாளம் இல்லை... மனைவி இல்லாமல் ஆளுமை இல்லை!’’ - செஸ் விஸ்வநாதன் ஆனந்த்

அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி

‘‘என் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் முக்கியமானவர்கள். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. ஒருவர் என் அம்மா. இன்னொருவர் என் மனைவி. அம்மா இல்லாமல் என் அடையாளம் இல்லை. மனைவி இல்லாமல் இந்த ஆளுமை இல்லை என்றே சொல்லலாம்.

அம்மா சுசீலாதான் எனக்குள் செஸ் ஆர்வத்தை உருவாக்கியவர். அவர்தான் எனக்கு முதல் செஸ் குரு. அந்த ஆர்வத்தை எனக்குள் கட்டாயமாகத் திணிக்காமல், என் விருப்பம் அறிந்து ஊக்கப்படுத்தியது ஸ்பெஷலான விஷயம். ‘படிக்கிற வயசுல விளையாட்டு எதுக்கு?’ எனக் கேட்கும் பெற்றோருக்கு மத்தியில், நான் நேசித்த விளையாட்டை என் வாழ்க்கையாக்கிக்கொள்ள எல்லா வழிகளிலும் ஆதரவாக நின்றவர். ஆரம்ப நாள்களில் என்னுடன் எல்லாப் போட்டிகளுக்கும் வருவார். என் கவனம் செஸ்ஸைத் தவிர வேறு எதிலும் திரும்பிவிடாதபடி அக்கறையாகப் பார்த்துக்கொள்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick