தோல்விகளுக்குப் பிறகு நிச்சயம் ஜெயிப்பீங்க! - மாடல், நடிகை மீரா மிதுன்

மாடலிங்கும் மாநிறமும் சாஹா

‘ஆளப் போகிறாள் தமிழச்சி’ என அடுத்த வெர்ஷனுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.சென்னையின் முன்னணி மாடல். தமிழ் சினிமாவின் புதுமுக நடிகை. ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை அடுத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கவனம் ஈர்த்திருத்திருப்பவர். சொல்லிலும் செயலிலும் மீராவின் தமிழ் உணர்வு சிலிர்க்கவைக்கிறது.

‘`சென்னைப் பொண்ணு நான். படிச்சது பயோடெக்னாலஜி. நினைவு தெரிஞ்ச நாள் முதல் டாக்டரேட் வாங்கறதுதான் கனவு. ஆனா, ஆராய்ச்சிப் படிப்புக்காக என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப அம்மாவுக்கு இஷ்டமில்லை. டான்ஸ் ஷோஸ் பண்ணும்போது என்னைப் பார்த்த பலரும் வாய்ப்புகள் கொடுக்கத் தயாரா இருந்தாங்க. அப்படித்தான் ஒரு கொரியோகிராபர் என்னை விடாம விரட்டி, கோ-ஆப்டெக்ஸ் ஷோவுல மாடலிங் பண்ண வாய்ப்பு கொடுத்தார். சும்மா ஜாலியா பண்ணித்தான் பார்ப்போமேனு சம்மதிச்சேன். ஓவர்நைட் பாப்புலாரிட்டினு சொல்வாங்களே... அது என் விஷயத்துல உண்மையாச்சு. பொதுவா மாடல்கள் எல்லாரும் செம கலர். நான் மட்டும்தான் மாநிறம். ஆனா, என்னுடைய அந்த கலர்தான் மத்தவங்களைக் கவர்ந்தது...’’ - மாநிறத்தில் மயக்குபவரை மாடலிங்கில் உச்சம் தொடவைத்தது அவரது உயரம்.

‘`சென்னையில உயரமான மாடல்கள் குறைவு. 5.8 அடி இருந்தால் சிறப்பு. சென்னையில் 5.5 அல்லது 5.6 அடிதான் இருக்காங்க. அதுக்கு மேல 5 இன்ச் ஹீல்ஸ் போடுவாங்க. அதனால உயரமா இருக்கிற வட இந்தியப் பெண்களுக்கே வாய்ப்புகள் அதிகம்.’’ - உண்மை உரைக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick