நம் சமையலறையில்... - ஆர்க்கிடெட் சரோஜினி திரு

டீகிளட்டரிங்எழுத்து வடிவம் : சாஹா - ஓவியம் : ரமணன்

வீட்டின் மூலையில் சமையலறை இருந்த காலம் மாறி, இன்று வீடுகளில் சமையலறை இருக்கிறதா என்பதே சந்தேகத்துக்குரிய விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. விடுமுறை நாள்களில் மட்டுமன்றி வார நாள்களிலும் ஹோட்டல்களில் அலைமோதும் கூட்டமே அதற்குச் சாட்சி.

பெரும்பாலான வேளைகளில் சமையலே நடைபெறுவதில்லை என்கிற நிலையில் சமையலறை பளிச்சென்று, படுத்து உறங்கும் இடம்போன்ற சுத்தத்துடன்தானே இருக்க வேண்டும்? ஆனால், பல வீடுகளிலும் சமையலறைதான் கலவரங்கள் நடக்கும் இடத்துக்கான களேபரங்களுடன் காணப்படுகிறது.

நல்வாழ்வுக்கான அஸ்திவாரம் சமையலறையே. அது முறையாகப் பராமரிக் கப்படாதபோது அத்தனை ஆரோக்கியக் கேடுகளுக்குமான ஆரம்ப இடமாகவும் மாறுகிறது.

சமையலறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் படி, அதில் அடைசல்கள் இல்லாமல் வைத்திருப்பது. வீட்டின் மற்ற இடங்களைவிடவும் சமையலறைதான் தேவையற்ற பொருள்களை அதிகம்கொண்ட அறையாக இருக்கிறது.

நகை, துணிமணிகளுக்கு அடுத்து அதிகம் பெண்கள் வாங்க விரும்புவது சமையலறைப் பாத்திரங்கள். அப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கிய பொருள்களைத் தேவையற்றவை எனத் தூக்கிப் போட ஒருவித மன தைரியம் தேவை. சமையலறையைச் சுத்தம் செய்வதை ஒரே நாளில் முடித்துவிடுவது சிறப்பு. அதற்கேற்ப அந்த வேலையைத் திட்டமிட வேண்டும். உதவிக்கு யாரையாவது வைத்துக்கொண்டு ஒரே நாளில் சுத்தப்படுத்துவது சுலபமாகவும் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick