பாஸ்போர்ட் A to Z தகவல்கள்!

அறிவோம் அனைத்தும்ஞா.சுதாகர்

ந்தியக் குடிமகன் ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால், பாஸ்போர்ட் அவசியம் தேவை.

1914-ம் ஆண்டு முதலாம் உலகப் போர் தொடங்கிய பிறகே அன்றைய பிரிட்டிஷ் அரசு, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தியது. போர் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்தச் சட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை மட்டும் தொடர்ந்தது.  இப்போதைய பாஸ்போர்ட்டுகள் 1967-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் வழங்கும் பணியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.


பாஸ்போர்ட் வகைகள்...

சாதாரண பாஸ்போர்ட் (குடிமக்களுக் கானது), டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட், அலுவல்ரீதியான பாஸ்போர்ட்  (அரசு அதிகாரிகளுக்கும் நிர்வாக ரீதியான பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும் அளிக்கப்படுபவை) என மூன்று வகையான பாஸ்போர்ட்டுகள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம்  வழங்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick