சகலகலா சாம்பார்!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

வசியமான அடிப்படை ரெசிப்பிகளில் சாம்பாருக்கு முக்கியத்துவம் உண்டு. நம்மில் பலர் வாரத்தின் பெரும்பாலான நாள்களில் ருசிக்கும் குழம்பு சாம்பாராகவே இருக்கும். சாம்பார் என்கிற வார்த்தை தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மசாலா பொருள்களை அரைத்துச் சேர்ப்பதற்கு `சம்பாரம்' என்று பெயர். அதிலிருந்து வந்ததே சாம்பார் என்றும் சொல்லப்படுகிறது. அரிசி உணவுகளுக்கு நீண்ட வரலாறு இருந்தாலும், சாம்பார் என்றுமே இளமைதான். 300 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட மராட்டியர்களின் அரண்மனையில் தயாரிக்கப்பட்டதே முதல் சாம்பார் என்று சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பழைமையோ, புதுமையோ... இட்லிக்கும் தோசைக்கும் சாதத்துக்கும் சூப்பர் ஜோடி சாம்பார்தானே? சென்ற இதழில் வெளியான சாம்பார் பொடி தயாரிப்பு முறைகளைக் கொண்டு விதம்விதமான சாம்பார்களைச் செய்து ருசிப்பது எப்படி? இப்படித்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick