டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

குண்டூசி, ஜெம் க்ளிப், ஆணிகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது ஃபேஸ் பவுடரைத் தூவி வைத்தால் அவை துரு பிடிக்காது; எடுப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

- ஆர்.அம்மணி, வடுகப்பட்டி

ப்பு ஜாடியின் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்து அதன்மீது உப்பைக் கொட்டி வைத்தால் ஈரத்தைக் காகிதம் உறிஞ்சிக்கொண்டு ஈரம் கசியாமல் இருக்கும்.

- அ.பவானி, வயலூர்

வர்சில்வர் பாத்திரங்களின் பளபளப்பு மங்கும்போது விபூதியைக் கொண்டு பாத்திரத்தை நன்கு தேய்த்துக்கழுவினால் வெள்ளி பாத்திரங்கள் போல மின்னும்.

- அ.பவானி, வயலூர்

காய் நறுக்கும் பலகையில் உள்ள கறைகளை எலுமிச்சைத் தோலால் தேய்த்துக் கழுவினால் கறைகள் காணாமல் போகும்.

சாவித்திரி, சென்னை-116

காதுகளைச் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் வைத்து... டி.வி ரிமோட்டிலுள்ள பட்டன்களை, குக்கர் வெயிட் உள்ளே, கேஸ் அடுப்பின் திருப்பும் குமிழ் போன்றவற்றைச் சுத்தம் செய்யலாம்.

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-95

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick