‘இருக்கிறவரைக்கும் சக மனுஷங்ககிட்ட அன்போடு இருப்போமே...’

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

‘‘நான் வேலையில சேர்ந்தபிறகு பார்த்த முதல் மரணம் அது. இளம்பெண் ஒருத்தங்க ரயில்வே ட்ராக்கைத் தாண்டும்போது ரயில் மோதி இறந்துட்டாங்க. அவங்களைக் காணோம்னு தேடின வீட்டாருக்குச் சடலமா கிடைச்சிருக்காங்க. மூன்று வயசுக் குழந்தையைத் தூக்கிட்டு அவங்க கணவர் மயானத்துக்கு வந்திருந்தார். வேலைக்குச் சேர்ந்த புதுசுங்கிறதால விவரம் தெரியாம சடலத்தை ரொம்பப் பக்கத்துல போய் பார்த்துட்டேன். மண்டைப் பகுதி திறந்த நிலையில பார்த்ததால, எனக்கு சாப்பாடு, தூக்கமே கொள்ளாமப் போயிடுச்சு.  அதுலேருந்து மீண்டு சகஜநிலைக்கு வரவே ஒரு மாசமாச்சு...’’ - வலி சுமந்து பேசுகிறார் பிரவீணா சாலமன். சென்னை, புழுதிவாக்கம் மயானத்தின் பொறுப்பாளர். மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள்நலத் துறை சார்பாக, சமீபத்தில் ‘ஃபர்ஸ்ட் லேடி’ என்கிற பெயரில் முதல் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதைப் பெற்றவர்களில் பிரவீணாவும் ஒருவர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick