ஆண் குழந்தை பருவமடையும்போது...

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி

‘`நம் குடும்பங்களில் பெண் குழந்தைகள் பருவமடைவதை உறவுகள், நட்புகள் சூழக் கொண்டாட்டமாக வரவேற்கிறோம். ஆனால், அதுவே ஓர் ஆண் குழந்தை எப்போது வயதுக்கு வருகிறது என்பதே நமக்குத் தெரியாது. அதை நாம் கண்டுகொள்வதில்லை. அறிந்துகொள்ள விரும்புவதுமில்லை. இதனால், ஆண் குழந்தைகள் தாங்கள் பருவமடைதலையும் அதற்குப்பின் ஏற்படும் பாலின உணர்வுகளையும் தங்களது நட்பு வட்டத்திடம் ரகசியமாகப் பகிரும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆண் குழந்தைகள் பருவமடைதலையும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் நம் குடும்ப அமைப்புக்கு அவசியம்’’ என்று சொல்லும் மனநல மருத்துவர் ஷாலினி, அதுபற்றி விரிவாகப் பேசினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick