இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்! - ஃபாத்திமா பேகம்

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

ந்தியாவின் முதல் பேசும் படம்  `ஆலம் ஆரா'. அதில் கதாநாயகியாக நடித்தவர் சுபைதா. பெண்கள் நடிக்க வருவது பெரும் சவாலாக இருந்த 1900-களின் முற்பகுதியில் தன் பெண்ணை கதாநாயகியாக்கிப் பார்க்கும் பெரும் ஆவல் கொண்ட அவரது தாயைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். பகடி செய்யப்படும் ‘சினிமா அம்மா’ இல்லை அவர். இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இந்திய சினிமாவின் தொழில்நுட்பத் துறையில் கலக்கும் மீரா நாயர், அபர்ணா சென், குர்விந்தர் சத்தா, தீபா மேத்தா, சுகாசினி, ரேவதி, சுதா கொங்கரா, காயத்ரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பிரியா, நந்தினி, ஐஷ்வர்யா, செளந்தர்யா என எத்தனையோ பெண்களின் முன்னோடி- ஃபாத்திமா பேகம்.

ஒருங்கிணைந்த இந்தியாவின் உருது மொழி பேசிய இஸ்லாமியக் குடும்பத்தில் 1892-ம் ஆண்டு பிறந்தவர் ஃபாத்திமா. இவரது திருமணம், இந்தியாவில் ஆப்பிரிக்க சித்தி இன மன்னர்கள் ஆண்ட ஒரே நாடான சச்சின் நாட்டின் (இப்போதைய சூரத் பகுதி) ஆறாம் மன்னரான மூன்றாம் சித்தி இப்ரஹிம் முஹம்மது யாகூத் கான் என்பவரை 1910-ல் திருமணம் செய்துகொண்ட ஃபாத்திமா, சுபைதா, சுல்தானா, ஷெஹ்சாதி என்ற மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயானார். ஆனால், இந்தத் திருமணம் நடக்கவே இல்லை என சச்சின் அரசப் பரம்பரையினர் மறுத்து வந்துள்ளனர். திருமணத்துக்கான சான்றும் இன்றளவும் கிட்டவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick