இது ‘அலைபாயுதே’ காதல்! - ஷ்ரவந்தி - சமீர்

நீ பாதி நான் பாதிசுஜிதா சென், அலாவுதீன் ஹுசைன் - படம் : பா.காளிமுத்து

`  ‘லைஃப் ஆஃப் பை’ என்கிற ஒரே படத் திலேயே உலகம் முழுக்க சிக்ஸர் அடிச்சாச்சு... அதுக்குப் பிறகு ஆளையே காணோமே' என்று நம்மை யோசிக்கவைத்த ஷ்ரவந்தி சாய்நாத், ``திரும்பி வந்துட்டேன்னு சொல்லு'' என்கிறார் நடிகையாக அல்ல, உதவி இயக்குநராக.

“கல்யாணம் முடிஞ்சாச்சு. என் கணவர் சமீர் இப்போ முழுநேர தயாரிப்பாளரா மாறியாச்சு. வேறென்ன வேணும்? இனி இந்த லைஃப் எங்களோடது” என்று துள்ளலாகத் தொடங்குகிறார் ஷ்ரவந்தி. “நீ கலக்கு டார்லிங்...” என்று கண்சிமிட்டுகிறார் சமீர்.

“கெளதம் மேனன் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்திருக்கேன். ‘துருவநட்சத்திரம்’  ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. எனக்கு சினிமா பத்திப் பெருசா தெரியாது. நிறைய விஷயங்களைக் கத்துக்க இந்த டீம் உதவியா இருக்கும்னு நினைக்கிறேன். பெரிய பட்ஜெட் படம் பண்றதைவிட, நல்ல கதை உள்ள ஒரு படத்தை இயக்கணும்னுதான் எனக்கு ஆசை. நீங்க ஆச்சர்யப்படும்படியான படத்தைக் கூடிய சீக்கிரம் நான் எடுப்பேன் பாருங்க” என்று ஷ்ரவந்தி கூற, “உன்னோட ஒரு முகத்தை மட்டும்தான் இங்க சொல்லியிருக்க, மீதியெல்லாம் யார் சொல்றது?” என்று அன்பு மனைவியின் தோளில் இடிக்கிறார் சமீர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick