‘லிவிங் டுகெதரில்’ வாழ்ந்து பிரிந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?

சட்டம் பெண் கையில்வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி

குடும்ப அமைப்பின் இறுக்கம், இன்றைய தலைமுறையினர் சிலரை வேறு முடிவெடுக்க வைக்கிறது. ‘பிடிக்கும்வரை இருவரும் இணைந்து வாழ்வோம், பிடிக்காவிட்டால் பிரிந்து போவோம்’ என்ற ‘லிவிங் டுகெதர்’ உறவுமுறையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிச் சேர்ந்து வாழ்ந்து பிரிந்த நட்சத்திரத் தம்பதி கமல்-கவுதமி முதல் நமக்குத் தெரிந்த ஐ.டி ஜோடி வரை பலரை நாம் அறிவோம்.

சடங்குகள் இல்லை. திருமண அத்தாட்சி எதுவும் இல்லை. பந்தத்தைப் பதிவுசெய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி ‘இல்லை’களால் இணைகிற பந்தமே ‘லிவிங் டுகெதர்’. திருமணம் ஆகாதவர்கள், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள் என பல சூழலில் வாழ்பவர்களும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி வாழ்ந்து பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்ச உரிமை உண்டா... சட்டம் என்ன சொல்கிறது என்பதை, சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கின் மூலமாகப் பார்ப்போம்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனா  திருமணமானவர். அவர் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திலிருந்த நிலையில், டெல்லி அருகில் உள்ள குர்கோனைச் சேர்ந்த சந்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அவர் வாழ்க்கைக்குள் வந்தார். சோனாவோடு சேர்ந்து வாழும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். தான் ஏற்கெனவே திருமணமானவன் என்றும், தன் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்துப் பெற்றுவிட்டதாகவும் சோனாவிடம் சந்தன் சொல்ல, சோனாவும் சந்தனின் காதலை ஏற்றுக்கொண்டு ‘லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழத்தொடங்கினர். சோனா இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick