“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” - ‘அருவி’ அதிதி பாலன் | Interview With Actress Aditi Balan - Aval Vikatan | அவள் விகடன்

“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” - ‘அருவி’ அதிதி பாலன்

ஸ்டார்வெ.வித்யா காயத்ரி - படம் : சொ.பாலசுப்ரமணியன்

சினிமாவில் பெண்ணை மையப்படுத்தி வரும் கதைகள் அரிது. அப்படி ஒரு குறிஞ்சி மலர்தான் சமீபத்தில் வெளியான ‘அருவி’ திரைப்படம். புதுமுகமானாலும் சடுதியில் மாறும் சிறுசிறு முகபாவனைகளிலிருந்து நுரையீரல் திணறும் அழுகை வரை ‘அருவி’ கதாபாத்திரத்தை வாழ்ந்து தீர்த்திருக்கிறார் அதிதி பாலன். படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த அதிதியை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்.

வழக்கறிஞர் அதிதி ஹீரோயின் ஆனது எப்படி?

‘`நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில். பெங்களூரில் சட்டம் படிச்சேன். `தியேட்டர் ப்ளே'யில் சேர்ந்து நிறைய நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். அப்படி என் நடிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், ‘அருவி’ பட ஆடிஷன் தகவலைச் சொல்லி என்னைக் கலந்துக்கச் சொன்னார். ஆனா, முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான கேரக்டர் கிடைக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick