கொட்டித்தீர்க்க... புலம்பித்தள்ள... - இதோ சில இணையதளங்கள்

அட!ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

‘உறவுச் சிக்கல்கள், வீட்டுப் பிரச்னைகள், அலுவலக அவஸ்தைகள் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, பெண்கள் இங்கே புலம்பித் தீர்க்கலாம். இது ஒரு சுமைதாங்கிபோல... உங்களின் கண்ணீர் முதல் குற்ற உணர்ச்சி வரை எதையும் இங்கே இறக்கிவைக்கலாம்’ என்று பெண்களை அழைக்கின்றன சில இணையதளங்கள்.

நாற்பது வயதைக் கடந்த பெண்கள், பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பற்று இருக்கும் நிலையில், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை நம்பகமானவர் களிடம் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ள விரும்புவது இயல்பு. அதற்கான ஒரு வெளியாக நாங்கள் இருப்போம் என நம்பிக்கை கொடுக்கும் gleeden.com. findnewpassion.com போன்ற இணையதளங்களை மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லியில் வசிப்பவர்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த வலைதளங்களை நிர்வகிப்பவர்களும் பெண்களே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick