கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

சாதிகள் இருக்கேடி பாப்பாநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

``சாதி என்பது மனிதத்துக்கு எதிரானது. பிறப்பின் அடிப்படையால் மனிதர்களைப் பிரித்துவைப்பது என்பது உலகில் வேறு எங்கும் இல்லை. குழந்தை களிடமிருந்து சாதியம் என்பதை காலம் காலமாக மறைத்தே வைத்திருக்கிறோம். அதுகுறித்த விழிப்பு உணர்வைக் குழந்தை களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற் காகவே இதை முன்னெடுத்தேன்'' என்கிறார் `சாதிகள் இருக்கேடி பாப்பா - 3' என்கிற ஆவணப் படத்தை இயக்கியிருக்கும் கீதா இளங்கோவன். அவரிடமும் அந்தப் படத்தில் பங்கெடுத்திருக்கும் உடுமலை கௌசல்யா விடமும் ஓர் உரையாடல்.

முதலில் கீதா இளங்கோவன்...

கௌசல்யாவின் பேட்டியையே படமாக இயக்க நினைத்தது ஏன்?


``சாதியின் கொடூர முகத்தைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும் என்றால் ஆணவக் கொலைகள் குறித்து அவர்களிடம் பேச வேண்டும். அதனால் அதை எதிர்த்துத் தன்னையே போராளியாக முன்னிறுத்தி நாம் வாழும் காலகட்டத்தில் வாழும் கௌசல்யாவைச் சந்தித்துக் குழந்தைகள் உரையாடினால், சாதி எத்தனை கொடுமை யானது என்று புரியவைக்கலாம். அதில் பாதிக்கப்பட்டவர் மீண்டு, சமூகப் போராளி யாக, சமூகப் பணிகளில் ஈடுபடுவது அந்தக் குழந்தைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும் என்றும் நினைத்தேன்.’’

ஒரு பெண் என்பதால்தான் உங்களால் கௌசல்யாவிடம் இந்த உரையாடலை நடத்த முடிந்ததா?

``இருக்கலாம். ஒரு பெண் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வரும் சவால்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கும் என்பதை, நானும் என் இணையரை என் சுய விருப்பத்தில் தேர்ந்தெடுத்த காரணத்தால் அறிவேன். பெற்றோரின் அரவணைப்பிலும் அதன்பின் கணவரின் அன்பிலும் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பகல் பொழுது எப்படி இப்படிப் புரட்டிப் போட்டது என்பது என்னை மிகவும் பாதித்தது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick