சூப்பர் 10 பெண்கள் - இந்திய அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள் | 10 Indian Female Notable Person of the Year 2017 - Aval Vikatan | அவள் விகடன்

சூப்பர் 10 பெண்கள் - இந்திய அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

இந்தியாகுணவதி

பிரியங்கா சோப்ரா

பதின்ம வயதுகளில் பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், மாடலாக தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்று பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வளர்ந்திருக்கிறார். சூழலியல், பெண் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அளிக்கவேண்டிய முன்னுரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் குரல் இவருடையது.

ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா. ``பெரிதாக யோசியுங் கள். எல்லைக்கோட்டைப் பிறகு வரைந்துகொள்ளலாம்’’ என்கிற ரோஷிணி, இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பெண் ஆளுமைகளில் ஒருவர். கிராமப்புற மக்களுக்கான கல்விப்பணியிலும் கவனம் செலுத்திவருகிறார்.

குல்மெஹர் கவுர்

`என் தந்தை மரணத்துக்குக் காரணம் பாகிஸ்தான் அல்ல... போர்தான்’ என்று எழுதிய அட்டை யோடு இவர் நிற்கும் வீடியோ (#ProfileForPeace), மக்கள் மனதில் மத துவேஷத்தைத் துடைத்து, புதிய மாற்றத்தை உருவாக்கும் அமைதிக் கான முயற்சியானது; பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick