சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள் | 10 Tamil Nadu female Notable person of the year 2017 - Aval Vikatan | அவள் விகடன்

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

தமிழ்நாடுவி.எஸ்.சரவணன், கு.ஆனந்தராஜ், ஆ.சாந்தி, மு.பார்த்தசாரதி, வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் தோழி

அரசியல் என்பது ஆட்சி, அதிகாரம், பதவி என நினைப்பவர்களின் எண்ணங்களை உடைத்தெறிந்து, அது எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பதற்கான வாழும் சாட்சியே லட்சுமி அம்மா. தஞ்சாவூர் அருகே சிறிய கிராமத்தில் பிறந்து, கடுமையான வறுமையிலும் அடிப்படைக் கல்வியைப் போராடிப் பெற்றவர். தலைமறைவு காலத்தில் இருந்த இடதுசாரி கட்சித் தோழரைத் திருமணம் செய்துகொண்டவர். பெண்களை அரசியல் போராட்டங்களில் ஈடுபட செய்த இவர், இன்றும் களத்தில் நின்று போராடி முன்மாதிரியாகத் திகழ்கிறார். இவரின் தன் வரலாற்று நூலான, ‘லட்சுமி என்னும் பயணி’ பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick