சூப்பர் 10 பெண்கள் - உலக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

உலகம்கானப்ரியா

முசூன் அல்மெல்லெஹான் (Muzoon Almellehaan)

19 வயதான இந்த இளம்பெண், யூனிசெஃப்பின் `இளைய நல்லுறவுத் தூதர்’.  சிரியா அகதியான இவர், மலாலாவின் செயல்களால் ஈர்க்கப்பட்டு, சிரியாவில் பெண் கல்விக்கான விழிப்பு உணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 2013-ம் ஆண்டு, உள்நாட்டுப் போர் காரணமாகச் சிரியாவைவிட்டு வெளியேற நேர்ந்தது. 2015-ம் ஆண்டு, ஐந்து வருட விசா பெற்று இங்கிலாந்தில் குடியேறினார். மீண்டும் தன் சொந்த நாடான சிரியாவுக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவரது லட்சியம், சிறந்த பத்திரிகையாளர் ஆவதே. வாவ் பெண்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick