தோழர் நயன்தாரா! - இயக்குநர் கோபி நயினார் | Interview with Aramm movie director Gopi Nayinar - Aval Vikatan | அவள் விகடன்

தோழர் நயன்தாரா! - இயக்குநர் கோபி நயினார்

அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - படம் : பா.காளிமுத்து

மிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்றி, தமிழ் சினிமாவுக்கும் தன் படம் மூலம் `அறம்' செய்ய விரும்பியவர் இயக்குநர் கோபி நயினார். புறக்கணிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு முதல் படத்திலேயே புகழின் உச்சம் தொட்டபோதிலும், அந்த போதையைத் தலைக்கேற்றிக்கொள்ளாமல் வியக்கவைக்கிற தோழர்.

அழகிகளின் பிரதிநிதியாக மட்டுமே நாம் பார்த்துப் பழகிய நயன்தாராவை அறம் பேசும் அரசியாகக் காட்டியவர். பெண்களை மதிக்கும் கதையைக் கொடுத்து, பெண்கள் மதிக்கும் இயக்குநராகியிருப்பவரின் சொல்லிலும் செயலிலும் பெண்மை போற்றப்படுகிறது. நயன்தாராவை மட்டுமல்ல... தான் சந்திக்கிற அத்தனை பெண்களையும் `தோழர்' என்றழைப்பதிலேயே அது உறுதியாகிறது.

``என் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கே பெண்தன்மை என்பது முக்கியம். ஆனால், உலகம் முழுவதும் ஒடுக்கப்படுவதும் பெண் இனம்தான்...'' - யதார்த்தம் பேசுபவரின் வாழ்க்கையை அழகாக்கியதில் அவரின் மனைவிக்கும் மகளுக்கும் பெரும்பங்குண்டு. அவரது வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருப்பவரும் ஒரு பெண்... நயன்தாரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick