புத்தாண்டு பலன்கள் 2018

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

பல வழிகளில் பணம் வரும்!

மேஷம்: நினைத்ததை முடிக்கும் நெஞ்சுரம் மிக்கவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சந்திரன் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது.  கடுமையான கோடை வெயிலில் நடந்துவந்த உங்களுக்கு இந்தப் புத்தாண்டு குளிர்தரும் சோலைவனமாகத் திகழப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் நிலவும். பணம் பல வழிகளிலும் வரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாகக் கல்வியில் சாதனை படைப்பார்கள். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.  வி.ஐ.பி-க்களின் தொடர்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்துமிக்க புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் இதுநாள்வரை இருந்த பிரச்னைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். இந்தப் புத்தாண்டு எல்லாவகையிலும் நற்பலன்களை அள்ளித்தரும்.


திறமைக்கான அங்கீகாரம் உண்டு!

ரிஷபம்:
அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டுமே நம்பும் ரிஷப ராசிக்காரர்களே! உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். எவ்வளவு கடினமான வேலைகளையும் விவேகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதுநாள்வரை உங்களைக் குறைத்து மதிப்பிட்டுவந்தவர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள்களாக எண்ணியிருந்த வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள் வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக நேரம் முடிந்தும் கூடுதலாகப் பணிபுரிய வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும்; அதற்கேற்ற பலனும் கிடைக்கும். சோதனைகளைத் தாண்டி, சாதனை படைக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick