அந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்!

படிப்பதும் கேட்பதும்ப.தினேஷ்குமார்

தமிழிசை செளந்தரராஜன் (தமிழக பா.ஜ.க தலைவர்)

“எனக்குத் திரைப்படம் பார்க்கும் பழக்கம் கிடையாது. என்னை லகுவாக்க உதவுவது புத்தகங்கள்தாம். இதை மனதில்கொண்டு ஐயாயிரம் புத்தகங்கள்கொண்ட நூலகத்தையே எனது வீட்டில் வைத்திருக்கிறேன். இரவு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடியற்காலை வரையிலும்கூட நெடு நேரம் படிப்பேன். அப்படி, எனக்கு எப்போதுமே ஊக்கத்தைத் தரும் புத்தகங்கள் பாரதியார் கவிதைகள்தாம். எந்தவொரு கடினமான சூழலிலும்கூட பாரதியார் கவிதைகளில் சில வரிகள் படித்தாலே மனம் லேசாகிவிடும். எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு நூல் திருக்குறள். திருக்குறளின் மேலாண்மை இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது. நிறைய கவிதைத் தொகுப்புகளும் படிப்பேன். தலைவர்களுடைய சுயசரிதைகள் நிறைய படித்திருக்கிறேன். இப்போது கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைக்குப் புத்துணர்வு தந்து என்னைப் புதியவளாக்குவது புத்தகங்களே!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick