ஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்!

ன்றைய நிலைக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது... அனிதாக்கள், பிரதீபாக்கள், சுபஸ்ரீக்கள் பலியாவதைத் தடுப்பது என்பதை ஆணித்தரமாகச் சொல்லிய ஆசிரியரின் நம்பிக்கையை வளர்ப்போம்.

- ஐஸ்வர்யா, சென்னை-20

‘கா
லா’ படத்தை போலவே ஈஸ்வரி ராவின் பேட்டியும் கலர்ஃபுல்!

- அ.முரளிதரன், மதுரை-3

கு
ழந்தைகளுக்கு, அப்பா அம்மா பெயரை வைக்கத் தயங்குகிற காலத்தில், தன்னை உயர்த்திவிட்ட, ஜானகி டீச்சரின் பெயரை, பெண் கதாபாத்திரங்களுக்கு வைத்து, நன்றியைக் காட்டும் கிரேசி மோகன், ‘கிரேட்’ மோகன்!

- என்.கோமதி, நெல்லை-7

காதல் திருமணம் பிரிவு, விபத்து, மரணப்படுக்கை என்று தன்னுடைய வாழ்க்கை கருகியது போல், மற்றவர்கள் வாழ்வும் அப்படி ஆகக் கூடாது என்று ‘நேசம்’ அமைப்பின் மூலம் மற்றவர்களை  வாழவைக்கும் பிரேமா ‘வழிகாட்டும் ஒளி’தான்!

- எம்.செல்லையா, சாத்தூர்

ட்லி, அடுத்து சப்பாத்தி என வடக்கு தெற்கை சங்கமாக்கிவிட்டு கலக்கிவிட்டீர்கள் அத்தனை வகை சப்பாத்திகளையும் செய்து பார்க்க ஆசை. குறிப்பாக சித்தி கோக்கி சப்பாத்தியின் வீடியோ செய்முறை சூப்பர்!

- ஆர்.ரங்கநாயகி, சென்னை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்