பொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது! - வானதி சீனிவாசன்

பிரபலங்களின் பின்னே...மு.பார்த்தசாரதி, படங்கள் : க.விக்னேஷ்வரன்

ரசியல் விவாதங்களின்போது முகத்தில் புன்னகை மாறாமல் பேசுபவர் வானதி சீனிவாசன்... தமிழகத்தின் பா.ஜ.க செயலாளர். அரசியல் தாண்டி, தன் கிராமத்தைத் தத்தெடுத்து சமூகப் பணிகளும் செய்துவருகிறார். இதோ... அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் உலியம்பாளையம் கிராமத்தில் ‘எ டே வித் வானதி!’

கிராமத்துக்குள் வானதியின் கார் நுழைந்ததுமே பலரும் அதனை நோக்கி வர ஆரம்பிக்க, வானதி காரிலிருந்து இறங்கிச்சென்று அனைவரிடமும் நலம் விசாரித்தார். “வானதி கண்ணு, உன் வீட்டுக்காரரு எப்படி இருக்காரு? புள்ளைங்கெல்லாம் சௌக்கியமா இருக்குதுங்ளா? போன தடவ தெக்கால இருக்குற கொளத்த தூர்வாரிப்போட்டியே... அதுல நல்லா தண்ணி சேந்து கெடக்குது கண்ணு” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்மணி, “அப்டியே ஒரு எட்டு வந்து வீட்டுல காபித் தண்ணி குடிச்சுப்போட்டு போலாம்ல” என்று அழைக்க, “இல்லீங்க்கா, இப்போ இவங்ககூட வேலையிருக்கு. அடுத்த முறை வரும்போது வர்றேங்க்கா’’ என்று விடைபெற்றவர், ஊரின் மையத்திலிருந்த நூலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

‘மக்கள் நூலகம்’ என்று பெயரிடப் பட்டிருந்தது அந்தக் கட்டடம். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் பக்கத்திலிருந்த பள்ளி மாணவர்கள் தகவலறிந்து நூலகத்துக்கு வந்துவிட்டார்கள். “அக்கா, நேத்துதான் உங்கள டி.வி-யில பாத்தோம், சூப்பரா பேசினீங்க” என்றாள் ஒரு மாணவி. “மேடம், எங்க ஸ்கூல் பேச்சுப் போட்டிக்கு இங்கதான் நோட்ஸ் எடுத்திருக்கேன்’’ என்றான் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன். அவர்களிடம் பேசிக்கொண்டே நமக்கு நூலகத்தைச் சுற்றிக்காட்டினார் வானதி. ‘`இதோ, இந்தப் புத்தகங்கள் எல்லாம் கவிஞர் வைரமுத்து அனுப்பிவெச்சது. அந்தப் பக்கம் இருக்குறதெல்லாம் ஸ்மிருதி இரானி கொடுத்தாங்க. விவேகானந்தா கேந்திரத்துல இருந்தும் சில புத்தகங்கள் வந்திருக்கு. நாங்களும் சில கலெக்‌ஷன்ஸ் வாங்கி வெச்சிருக்கோம். எங்க கிராமத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதைப் பயன்படுத்திக்கிறாங்க. இங்கே இன்டர்நெட் வசதியும் வெச்சிருக்கோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick