ஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்!

நிவேதா & சத்யாநீங்களும் செய்யலாம்சாஹா, படங்கள் : பா.ராகுல்

மைக்க நேரமில்லாத பலருக்கும் அவசரத்துக்குக் கைகொடுப்பது தொக்கு வகைகள். டிபன் அயிட்டங்களுக்குத் தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் தொக்கு சரியான சாய்ஸ். கடைகளில் கிடைக்கிற தொக்குகளில் கெமிக்கல் கலப்பே அதிகம் என்பதால் சுவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். தக்காளியையும் பூண்டையும் விட்டால் பலருக்கும் வேறு எதிலும் தொக்கு செய்யத் தெரியாது. அப்படியே செய்தாலும் முறைப்படி செய்ய முடியாததால் அவற்றை அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இயற்கையான முறையில் ஆரோக்கியமான அயிட்டங்களில் சுவையான தொக்கு வகைகள் செய்வதையே பிசினஸாகச் செய்கிறார் கள் சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த நிவேதாவும் சத்யாவும்.

‘`நாங்க எல்லாரும் கூட்டுக் குடும்பமா இருக்கோம். நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். புகுந்த வீட்டுல வேலைக்குப் போக வேண்டிய தேவை ஏற்படலை. நான் ஆறாவதுலேருந்து காலேஜ் வரைக்கும் ஹாஸ்டல்லதான் படிச்சேன். சாப்பாடு சரியா இருக்காது. லீவுக்கு வீட்டுக்கு வரும்போதெல்லாம் அழுவேன். அதுக்காக அம்மா எனக்கு விதவிதமான தொக்குகள் செய்து கொடுப்பாங்க. 20 நாள்கள் வெச்சிருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. என் புகுந்த வீட்டு மனுஷங்க எல்லாரும் கிராமத்து மனுஷங்க. எங்கம்மா மாதிரியே என் மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிஸ்ட்டுங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சது. மாம னாருக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்த ஆவாரம்பூவில் தொக்கு செய்வாங்க. வீட்டுல யாருக்காவது மூட்டுவலின்னா முடக்கத்தான் கீரை தொக்கு செய்வாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick