கீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி! | Healthy and yummy Chapati recipes - Aval Vikatan | அவள் விகடன்

கீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி!

கிச்சன் பேஸிக்ஸ் - சப்பாத்திவிசாலாட்சி இளையபெருமாள், படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

தினம்தோறும் நம் சமையலில் முடிந்த வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயல்கிறோம். இருப்பினும் குழந்தைகளைத் தினமும் கீரை மற்றும் காய்கறிகள் சாப்பிட வைப்பது அவ்வளவு எளிதல்ல. இவற்றைச் சப்பாத்தியுடன் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனதைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், உடம்புக்கும் ஆரோக்கியத்தை அளிக்க முடியும்.

கோதுமையுடன் காய்கறிகள், கீரைகள், சோயா, ஓட்ஸ் சேர்த்துச் செய்யும் சப்பாத்திகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகின்றன. மேலும், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து இருப்பதுடன் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன சென்ற இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் நாம் கோதுமையில் இருந்து பேஸிக் மாவு தயாரித்து அதை உபயோகித்து விதவிதமான சப்பாத்தி மற்றும் ரொட்டிகள் தயாரிப்பது எப்படி என்று பார்த்தோம். இந்த இதழில் கீரைகள், காய்கறிகளைச் சேர்த்து சூப்பர் சுவையுடன் பல்வேறு வகையிலான சப்பாத்தி மற்றும் தேப்லாக்களை எளிதாகத் தயாரிப்பது பற்றி அறிவோம். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick