ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா | Interview with young music director shivathmika - Aval Vikatan | அவள் விகடன்

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

எவர்கிரீன் இசைஉ.சுதர்சன் காந்தி, படங்கள் : வீ.நாகமணி

ப்பா அம்மா மலையாளி. ஆனா, நான் படிச்சு, வளர்ந்தது எல்லாமே கோவையில்தான். 11-ம் வகுப்பு படிக்கும்போது என்னை ஸ்கூல்ல இருந்து தூக்கிட்டாங்க. காரணம், நான் தொடர்ந்து ஃபெயில் ஆகிட்டே இருப்பேன். ஒருமுறை பிசிக்ஸ் எக்ஸாம்ல நாலு மார்க்தான் வாங்குனேனா, பார்த்துக்கோங்க. பதில் எழுதுறதைவிட கேள்வித்தாள்ல பாட்டு வரிகள் எழுதுறதுதான் அதிகம். பரீட்சை எழுதுறது செம போர். அதிலும் நான் படிச்சது சி.பி.எஸ்.இ. என்னைச் சுற்றி படிப்ஸா இருப்பாங்க.  அதனால, டீச்சர்ஸ், கூடப்படிக்கிறவங்கனு எல்லாருமே என்னை விசித்திர ஜீவியாத்தான் பார்ப்பாங்க.

எனக்கு ஃப்ரெண்ட்ஸுனு யாரும் கிடையாது. வீட்லயும் நான் ஒரே பொண்ணு. என்டர்டெயின்மென்ட்டுக்கு வழியே இல்லை. அதனாலயே போட்டோகிராபி, கதை எழுதுறது, பெயின்டிங், ஸ்கெட்சிங்னு எக்கச்சக்க விஷயங்களை நானாவே கத்துக்க ஆரம்பிச்சேன். மியூசிக்கும் அப்படி வந்ததுதான். ஆமாம், மியூசிக்ல எனக்கு இன்ஸ்பிரேஷனே என் லைஃப்தான். என் சந்தோஷம், கஷ்டம் எல்லாத்தையும் வெளிப்படுத்த இசையைத் தேர்ந்தெடுத்தேன்.

மூணு வயசுலயே விஜயஜெயா மேடம்கிட்ட கர்னாட்டிக் மியூசிக் கத்துக்க சேர்த்துவிட்டாங்க. ஆறாவது படிக்கும்போது நானே பாட்டு எழுதி மியூசிக் கம்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதுவும் நான் முதல்ல கம்போஸ் பண்ணினது நாயைப் பற்றிய பாடல். நாய்தான் இருக்கறதிலேயே நல்ல உயிரினம்னு சொல்லுவேன்...” - பேசப்பேச உற்சாகமாகிறார் சிவாத்மிகா.  இவர், `ஆண்டனி’ என்ற படத்தின் மூலம் இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick