அதுவும் ஒருநாள் நிறைவேறும்! - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா

கண்ணே கலைமானேசனா, படங்கள் : வீ.நாகமணி

``நாங்க ரெண்டு பேரும் அம்மா பொண்ணுன்னு சொல்றதைவிட, நல்ல ஃப்ரெண்ட்ஸ்னுதான் சொல்வோம்'' என்கிறார்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் போட்டியாளர் ரக்‌ஷிதாவும் அவரின் அம்மா அர்ச்சனாவும்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூர். தாத்தா பாட்டிக்கு பூர்வீகம் தமிழ்நாடு. அதனால, தமிழ் நல்லா பேசுவேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா பாடுவாங்க. அம்மா ஃப்ளூட்டும் வாசிப்பாங்க. அம்மா வயித்துக்குள்ளே நான் இருக்கும்போது அவங்க நிறைய பாட்டு கேட்பாங்களாம்... அப்படியே பாடுவாங்களாம். அதைக்கேட்டு அவங்களை நான் செல்லமா உதைப்பேனாம்!’’ என்று ரக்‌ஷிதா படபடக்க...

“இவளுக்கு நாலு வயசு இருக்கும்போதே மியூசிக் கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டோம். அடுத்த வருஷமே மைசூரில் ஒரு மியூசிக் எக்ஸிபிஷன் நடந்துச்சு. அதுல, நிறைய குட்டிப் பசங்க பாடினாங்க. அப்போ, இவ கையிலே மைக் கொடுத்தப்போ, நீளமான விநாயகர் பாடலை பிழையில்லாம பாடினா. ‘இந்த வயசிலேயே இவ்ளோ நல்லா பாடுறாளே!’னு எனக்கும், இவங்க அப்பாவுக்கும் அவ்ளோ சந்தோஷம்!

என் பெண்ணின் நியாயமான ஆசைகளுக்கு நான் எப்பவுமே தடையா இருக்க மாட்டேன். அதனாலேயே ஒவ்வொரு போட்டியின்போதும், அவளை மைசூரிலிருந்து சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வருவேன்; கூடவே இருப்பேன். ஏன்னா, இவ பாடுறதைக் கேட்கறது எனக்கு அவ்ளோ சந்தோஷம்!” என்று அம்மா அர்ச்சனா  நெகிழ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick