கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார் | Kamal and ajith are my students - Music teacher Sandhiya vasanthkumar | அவள் விகடன்

கமலும் அஜித்தும் என் மாணவர்கள்! - சந்தியா வசந்தகுமார்

அடையாளம்கு.ஆனந்தராஜ், படம் : ரா.வருண் பிரசாத்

‘`இசைதான் அனுதினமும் என்னை மகிழ்ச்சியோடு இயங்கவைக்குது.  இசையைத் தவிர என் வாழ்க்கைக்கான அர்த்தமும் அடையாளமும் வேறு எதுவுமில்லை” - அன்பும் அடக்கமுமாகப் பேசுகிறார் சந்தியா வசந்தகுமார். புகழ்பெற்ற இசை ஆசிரியரான இவர், ஆயிரக்கணக்கானோருக்கு இசையைப் பயிற்றுவித்தவர்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரில். அப்பா போலீஸ் ஆபீஸர். அம்மா டாக்டர். சின்ன வயசுல ஒருமுறை அப்பாவின் நண்பர் ஒருவர் கிடார் வாசிக்கிறதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஒன்பதாவது படிச்சுட்டிருந்தப்போ, எனக்குப் பிடிச்ச பியானோ க்ளாஸ்ல சேர்ந்தேன். படிப்பைவிட இசையில்தான் ஆர்வம் இருந்தது. 1975-ம் வருஷம் பி.எஸ்ஸி செகண்டு இயர் படிச்சுட்டிருந்தப்போ கல்யாணமாச்சு. கணவர் வசந்தகுமாருக்கு பூர்வீகம் சென்னைதான். அவர் புகழ்பெற்ற கிடார் இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் - கணேஷ், பாம்பே ரவி, மலையாளம் ரவி, சலீல் சவுத்ரி உள்ளிட்ட புகழ்பெற்ற தென்னிந்திய இசைக்கலைஞர்களிடம் வேலைபார்த்தவர்’’ என்றவர், திருமணத்துக்குப் பிறகு தன் இசைப்பயணத்தை இன்னும் ஆர்வத்துடன் தொடர்ந்திருக்கிறார்.


‘`டிகிரி முடிச்சதும், சென்னை ‘மியூசீ மியூசிகல்ஸ்' ஸ்கூல்ல வெஸ்டர்ன் மியூசிக் கத்துகிட்டேன். அப்புறம் மியூசிக் டீச்சரா வொர்க் பண்ணினேன். கணவர் பிஸியான நபராக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இசை சார்ந்த நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக்கொடுப்பார். 1989-ம் வருஷம் அவர் இறந்துட்டார். ஈடுசெய்ய முடியாத அவர் இழப்பில் இருந்து மீண்டுவர, இசையைத்தான் பற்றிக்கொண்டேன்’’ என்பவருக்கு ரீனு, மீனு, அன்னு என்று மூன்று மகள்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick