கணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை!

ஜீவனாம்சம் - சட்டம் என்ன சொல்கிறது? கு.ஆனந்தராஜ்

த்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவர், விவாகரத்து பெற்ற தன் முன்னாள் கணவர் பவன் குமார் ஜெயினிடமிருந்து மாதம்தோறும் ஏழாயிரம் ரூபாயை ஜீவனாம்சமாகப் பெற்று வந்திருக்கிறார். முன்னாள் கணவர், மாதம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெற்று வருவதாக சுனிதா கேள்விப்படுகிறார். உடனே முன்னாள் கணவரின் உண்மையான சம்பளத்தைத் தெரிந்துகொள்வதற்காக `ஆர்.டி.ஐ' என்கிற தகவல் உரிமைச் சட்டம் மூலமாக விண்ணப்பிக்கும் சுனிதாவுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அடுத்து, மத்திய தகவல் ஆணையத்தை நாடுகிறார். அந்த ஆணையம், பவன் குமார் ஜெயினின் உண்மையான வருமான விவரங்களை சுனிதாவுக்குத் தர உத்தரவிடுகிறது. ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார், ஜெயின். பல ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை சமீபத்தில் வழங்கிய உயர் நீதிமன்றம், ‘விவாகரத்து பெற்றிருந்தாலும் முன்னாள் கணவர் பெறும் சம்பள விவரங்களை சம்பந்தப்பட்ட பெண் தெரிந்துகொள்ள முடியும்’ என அதிரடியாகக் கூறியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick