ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜூலை 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்  கனவுகள் நனவாகும். பண வரவு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த பிரிவினை நீங்கும்.

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

வெற்றிகளைச் சந்திக்கும் வேளையிது.


 ரிஷபம்  புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் கூடாப் பழக்கம் விலகும். சகோதரிக்குத் திருமணம் முடியும். செலவுகள் அதிகரிப்பதால் பணப்பற்றாக்குறையும் நீடிக்கும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதையறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை வீழ்த்த சிலர் செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

பிரச்னைகள் முடிவுக்கு வரும் நேரமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick