ஹனிமூனுக்கு எங்க பசங்களையும் கூட்டிட்டுப் போறோம்! - ஸ்ரீதேவி- அசோக் சிந்தாலா

செல்லங்களின் செல்லங்கள் வெ.வித்யா காயத்ரி, படம் : அ.சரண் குமார்

காதலும் நாணமும் முகத்தில் மிளிர, புதுமண ஜோடியின் வனப்புடனும் களிப்புடனும் நம்மை வரவேற்கின்றனர் புதுமணத் தம்பதி ஸ்ரீதேவி - அசோக் சிந்தாலா. விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கண்களை உருட்டும் ஸ்ரீதேவி, நிஜத்திலோ செம ஸ்வீட்!

‘`வீட்டில் நான், அம்மா, அப்பா, என் பசங்க டாம், டஃப்பினு இருப்போம். அம்மாவுக்கு போன் பண்ணும்போது, ‘பசங்க என்ன பண்றாங்க’னு நான் கேட்கிறதைப் பார்க்கிற பலரும், எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு நினைச்சுப்பாங்க. நான் கேட்பது, என் பெட் செல்லங்கள் டாம், டஃப்பினு அவங்களுக்குத் தெரியாது. அவங்களை ‘நாய்’னு சொன்னா எனக்குப் பிடிக்காது. ‘கல்யாணத்துக்கு அப்புறம், உன் வீட்டுக்காரர் இதுங்களையெல்லாம் விரட்டிவிடப் போறாரு பாரு’னு சிலர் கேலி பண்ணுவாங்க. ஆனா, என் கணவர் அசோக்கும் ஒரு பெட் லவ்வர். சொல்லப்போனா, நாங்க சந்திக்கவும், வாழ்க்கையில் இணையவும் காரணமா இருந்தது டாமும் டஃப்பியும்தான்’’ என்கிற ஸ்ரீதேவியைத் தொடர்ந்து சுவாரஸ்யமான ட்விஸ்ட்டைச் சொல்கிறார் அசோக்... 

‘`என் சொந்த ஊர் பெங்களூரு. சென்னை யில் கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு, பெங்களூரில் ஐ.டி வேலையில் சேர்ந்தேன். பெட் போட்டோகிராபி, என் பேஷன்.  ஜாஸ், லூஃபினு ரெண்டு நாய்களை வளர்க்க ஆரம்பிச்சேன். விலங்குகளுக்கான என்.ஜி.ஓ பணிகளிலும் பங்கெடுத்தேன். முகநூலில் என் பெட் போட்டோகிராபி படங்களைப் பார்த்துட்டு, தன் செல்லங்களை போட்டோ எடுக்கிறதுக்காகத்தான் வந்தாங்க ஸ்ரீதேவி’’ என்கிறவர், அந்த அறிமுகம் காதல் பாதைக்கு மாறிய டைவர்ஷனைச் சொன்னபோது நிறைய புன்னகைகள் சேர்ந்துகொண்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick