தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி!

இந்தியாவின் முதல் பெண்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய பெண் ஆசிரியர் கமலா சத்தியநாதன்முதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

ராஸ் செனட் ஹவுஸ்... 1898-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா. கொஞ்சம் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் அந்த ஒற்றைப் பெண்மணி. `தென்னிந்தியாவின் முதல் பெண் பி.ஏ பட்டதாரி' என்கிற அறிமுகத்துடன் அவரது பெயர் அழைக்கப்பட, தடுமாறி மேடை ஏற எத்தனித்தார். அவரை சான்சிலரிடம் அறிமுகம் செய்துவைக்க வந்தவர், மாநிலக் கல்லூரியின் பிரபலமான பேராசிரியர். அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அவரைக் கண்டதும் மயக்கம் வராத குறை பெண்மணிக்கு. காரணம் - அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. குறுஞ்சிரிப்புடன் தன் வருங்கால மனைவியின் தடுமாற்றத்தை ரசித்தபடி அவரை அழைத்துக்கொண்டு மேடையேறினார் பேராசிரியர். `அந்த நொடி பூமி பிளந்து கீழே சென்றுவிட மாட்டோமா என்று எனக்குத் தோன்றியது' என்று பின்னாளில் தன் மகளிடம் வெட்கத்துடன் சொன்னார் அந்தப் பெண்மணி.  அவர் - கமலா ரத்தினம் சத்தியநாதன்... தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி, இந்தியாவின் முதல் பெண்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய பெண் பத்திரிகை ஆசிரியர்.

1879  ஜூலை 2 அன்று  ஒருகன்ட்டி சிவராம கிருஷ்ணம்மாவின் மகளாக ராஜமுந்திரியில் பிறந்தார் கமலா. பள்ளிப் படிப்பை முடித்ததும், மசூலிப்பட்டினம் நோபிள் கல்லூரியில் தன் இரு பெண்களையும் படிக்க அனுப்பினார் சிவராம கிருஷ்ணம்மா. தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரியும், அதன் பின் முதல் பெண் முதுநிலைப் பட்டதாரியுமானார் கமலா. சம்ஸ்கிருதமும் தெலுங்கும் ஒருபுறம், ஆங்கிலம் மறுபுறம் என்று தன் மகள்கள் மேற்கும் கிழக்கும் கலந்த சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் தந்தை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick