நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

வயது ஒரு தடையல்ல வெ.வித்யா காயத்ரி

‘`அங்க பார்த்தீங்களா... அந்த தாத்தா பாட்டி எத்தனை வெரைட்டி ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணி சந்தோஷமா சாப்பிடுறாங்க! எங்க கஃபே உணவுகள் அவங்க உடலுக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கை, இத்தனை உணவுகளை அவர்களை ஆர்டர் செய்யத் தூண்டும் சுவை... நாங்க வெற்றி பெற்றுட்டோம்தானே?” - கண்கள் மின்னக் கேட்கிறார், 22 வயதில் தொழில்முனைவோராகக் கலக்கிக்கொண்டிருக்கும் அஷ்வினி ஸ்ரீநிவாசன். சென்னை, நங்கநல்லூரில் உள்ள ‘80 Degrees East’ என்கிற டிராவல் தீம்டு கஃபேவின் உரிமையாளர்களில் ஒருவர். வித்தியாசமான வடிவமைப்பு, வெரைட்டி உணவுகள் என வெஜ் பிரியர்களுக்காக மணக்கும் இந்த உணவகம் தொடங்கிய கதைக்கு விதை... நட்பு என்கிறார் அஷ்வினி.

‘`நான் பிறந்து, வளர்ந்தது சென்னை. அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அம்மா இப்போ வேலையைவிட்டுட்டு, ஹோம்மேக்கரா இருக்காங்க. அண்ணன் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறான். இப்படி பிசினஸுக்குச் சம்பந்தமில்லாத குடும்பம். சின்ன வயசுலயிருந்தே எனக்கு க்ரியேட்டிவா யோசிக்கறது பிடிக்கும். அதைவிட, ஹார்டுவொர்க் பண்ண ரொம்பப் பிடிக்கும். பி.டெக் இன்ஜினீயரிங் படிப்பை நான் முடிக்கிற நேரம், ரெண்டு கம்பெனிகளில் ப்ளேஸ் ஆகியிருந்தேன். ஆனா, என் நீண்டகால நண்பரான ப்ரனேஷ், அவரோட ‘ஸ்டுடியோ 31’ என்ற வெடிங் போட்டோகிராபி ஸ்டுடியோவில் என்னை ஜாயின் பண்ணச் சொன்னார். பொதுவா எங்க ரெண்டு பேருடைய எண்ண ஓட்டமும் ஒன்றாக இருக்கும் என்பதால், நானும் சம்மதிச்சேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick