35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

இது சுவை வரம் கு.ஆனந்தராஜ், படங்கள் : செ.விவேகானந்தன்

“சமையல் கலை... இதை நான் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டதோடு, பல்லாயிரக் கணக்கான பெண்களுக்கும் கத்துக் கொடுத்திருக்கேன். அந்தப் பெண்களெல்லாம் என் கண்முன்னே நல்ல நிலைக்கு வளர்ந்து வந்ததைப் பார்த்து ஆனந்தப்பட்டிருக்கேன்” - பூரிப்பும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சியாமளா சிவராமன். சமையல் கலை வல்லுநரான இவர், பேக்கரி உணவுப் பொருள்கள் தயாரிப்பில் புகழ்பெற்றவர். சமையல் கலையில் ஆயிரமாயிரம் பெண்களைத் தொழில்முனைவோர்களாக உருவாக்கியவர்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் இலங்கை, கொழும்புவில். எங்க பூர்வீகத் தொழிலே கேட்டரிங்தான். அதனால சின்ன வயசுலயிருந்தே நல்லா சமைப்பேன். காலேஜ் படிக்க சென்னை வந்து, கல்யாணமாகி, பையன் பிறந்துனு இங்கேயே செட்டில் ஆகிட்டேன். பேக்கரி ரெசிப்பிகள் உள்ளிட்ட பல வகையான உணவுகளையும் செய்து, அக்கம்பக்கத்தினருக்குக் கொடுப்பேன். ஒருமுறை என் பையனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு நானே கேக் செய்ய, பலரும், ‘எங்க வீட்டு நிகழ்ச்சிக்கும் செய்து கொடுங்க’னு கேட்டாங்க” என்பவர், 1981-ம் ஆண்டு முதல் முழு நேரமாக குக்கரி பிசினஸுடன் பயிற்சி வகுப்புகளையும் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

“அந்த 1980-களில், சில கடைகள்லதான் கேக் போன்ற பேக்கரி உணவுகள் கிடைக்கும். அதனால வீட்டிலேயே கேக் செய்யவும், அதை பிசினஸா செய்யவும் பெண்களுக்கு விருப்பமும் வாய்ப்பும் இருந்தது. அப்போ வெளிநாடுகளில் ஃபேமஸாக இருந்த க்ரீம் கேக்ஸ், பஃப்ஸ், பீட்சா, பர்கர், வெரைட்டியான நான்-வெஜ் உணவுகளையெல்லாம் நான் செய்யக் கத்துக்கிட்டு, பலருக்கும் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன். இப்போ மாதிரி யூடியூப் வசதியெல்லாம் அப்போ இல்லை. நிறைய ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிட்டுப் பார்த்துதான் பலதரப்பட்ட ரெசிப்பிகளையும் செய்யக் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick