ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா | My Mom is the best - Says Joshna Chinappa - Aval Vikatan | அவள் விகடன்

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

எங்க அம்மாதான் பெஸ்ட் ஆர்.வைதேகி, படங்கள் : க.பாலாஜி

``இந்த வருஷம் மதர்ஸ் டே எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொரு வருஷமும் மதர்ஸ் டே அன்னிக்கு எங்க அம்மாகூட இருக்க முடியாம, ஏதாவது டோர்னமென்ட்ல ஏதோ ஒரு நாட்டுல இருப்பேன். இந்த முறை காமன்வெல்த் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் அம்மாகூட சூப்பராப் போச்சு. அவங்களுக்குப் பிடிச்ச சூஷி ஃபிஷ் ஸ்பெஷல் விருந்துதான், நான் அவங்களுக்குக் கொடுத்த மதர்ஸ் டே ட்ரீட்’’ -  டபுள் சந்தோஷத்தில் செம எனர்ஜியுடன் பேசுகிறார் ஸ்குவாஷ் ஸ்வீட்டி ஜோஷ்னா சின்னப்பா.

அதிகம் பேசாத ஜோஷ்னா, அம்மா சுனிதாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் மடைதிறந்த வெள்ளமாகிறார்... வாய் ஓயாமல் பேசுகிறார்.

``அம்மாவும் நானும் பெரும்பாலும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணுவோம். டிரஸ்ஸோ, ஜுவல்ஸோ ஒரே மாதிரி ரெண்டு வாங்குற பழக்கம் எனக்கு உண்டு. எங்க ரெண்டு பேரையும் பார்த்தா உங்களுக்கு அம்மா பொண்ணு மாதிரித் தெரியுதா? எங்களை முதன்முறை சேர்த்துப் பார்க்கிற யாரும் அப்படிச் சொன்னதேயில்லை. `அக்கா தங்கச்சியா?’னு கேட்பாங்க. நாங்க தனித்தனியா போகும்போது `உங்க அக்கா வரலையா?’னு என்கிட்டயும், `தங்கச்சி வரலையா?’னு அம்மாகிட்டயும் கேட்பாங்க. செம காமெடியா இருக்கும். ஏன்னா, நான் அப்படியே எங்க அப்பா ஜாடை’’ - அப்பா மாதிரி சிரிக்கிறவர், கேரக்டரில் அப்படியே அம்மாவாம்!

``அம்மா ரொம்ப கூல். எதுக்குமே டென்ஷனாக மாட்டாங்க. அம்மாவைப் பார்த்துதான் இசையை ரசிக்கக் கத்துக்கிட்டேன். பயமில்லாம வாழுறதுலயும் அவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பத்து வயசுல `ஸ்குவாஷ்தான் என் லட்சியம்’னு சொன்னபோது, அவங்க ஒரே ஒரு கண்டிஷன் போட்டாங்க. `உன் விருப்பத்துக்கு நாங்க தடைபோட மாட்டோம். ஆனா, டிகிரி முடிக்கணும். படிக்கலைன்னா ஸ்குவாஷ் கிடையாது’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. என் கனவை நனவாக்கணும்கிற வெறியில நானும் எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சேன். அன்னிக்கு `அம்மா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களே’னு கோபப்பட்டிருக்கேன். இன்னிக்கு படிப்பின் அருமை புரியும்போது அம்மாவின் வார்த்தைகளும் புரியுது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick