நீங்களும் செய்யலாம்

சாஹா, படங்கள் : வீ.நாகமணி

இலை வடாம் பிசினஸ் - சுலபம் ப்ளஸ் லாபம்! - ரமா

மைப்பதற்குக் கைவசம் காய்கறிகள் இல்லாதபோதும், காய்கறிகளின் விலை கன்னாபின்னாவென எகிறும்போதும் எல்லோருக்குமான சாய்ஸ் அப்பளமும் வற்றல், வடாம் வகையறாக்களும்தான். ‘ஆர்வம் இருக்கு. ஆனா, நேரமும் வீட்டுல இடமும்தான் இல்லை’ என்கிறவர்களுக்கு வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த ரமா.

‘`பத்தாவது வரைதான் படிச்சிருக்கேன். காலங்காலமா எங்கம்மா வற்றல், வடாம் போடறதைப் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். அப்படியே நானும் கத்துக்கிட்டேன். அக்கம்பக்கத்துல இருந்த வேலைக்குப் போற பெண்களுக்கு முதல்ல ஆர்டருக்கேற்ப செய்து கொடுத்திட்டிருந்தேன். ஒருகட்டத்துல மாசாமாசம் மளிகைச் சாமான்கள் வாங்கற மாதிரி, இதையெல்லாமும் மொத்தமா வாங்கற அளவுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே வாய்வழி விளம்பரம் மூலமா இன்னிக்கு இது எனக்கு முழுநேர பிசினஸாகவே மாறியிருக்கு...’’ என்கிற ரமா, பத்து வருடங்களாக இந்த பிசினஸில் பிஸி.

ரமாவின் தயாரிப்புகளில் வருடம் முழுவதும் ஹாட் சேல்ஸ் ஆகும் பட்டியலில் இலை வடாமுக்கு முதலிடம். ‘`குழந்தை பெற்ற பெண்களுக்குக் கொடுக்கிற பத்திய உணவுகளில் இலை வடாமும் இருக்கும். மற்ற வடாம், வற்றலை எல்லாம் வெயில் காலத்துலதான் செய்ய முடியும். ஆனா, வருஷம் முழுக்கச் செய்யக்கூடியது இலை வடாம்...’’ என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick