ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

ஓல்டு இஸ் கோல்டு ஆர்.வைதேகி, படங்கள் : கரிஷ்மா ஹரி, எஸ்.ஹதிஜத் ஆரிஃபா

`ஆட்டுக்கல், அம்மி, இயந்திரம்’ என்கிற பெயரில் வித்தியாச மான காட்சியுடன் களைக் கட்டியிருந்தது அந்த உணவுத் திருவிழா.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள `தளிகை’ ரெஸ்டாரன்ட்டில் மூன்றாம் ஆண்டுக் கொண்டாட்டமாக நடந்த அந்த ஒருநாள் காட்சியில், பாரம்பர்ய உணவுக் கருவிகள் அணிவகுத்து நின்றன.

பாட்டி, அம்மா, குழந்தைகள் என மூன்று தலைமுறைகளால் நிறைந்திருந்தது அரங்கு.

காபிக்கொட்டை அரைக்கும் மெஷினைப் பார்த்த சில பாட்டிகளுக்கு, நாஸ்டால்ஜியா நினைவுகள்...

அம்மிக் கல்லையும் ஆட்டுரலையும் பார்த்த அம்மாக்களுக்கோ, மழலை நாள் ஞாபகங்கள்...

இவையெல்லாம் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு ஏராளமான கேள்விகள்!

``அந்தக் காலத்துல அன்னன்னிக்கு காபிக்கொட்டையை வறுத்து, இந்த மெஷின்ல அரைச்சு, உடனே டிகாக்‌ஷன் போட்டுக் குடிப்போம். காபி வாசனை தெருக்கோடி வரைக்கும் மணக்கும். உங்கம்மா காலத்துல டிகாக்‌ஷனைக்கூட ஃப்ரிட்ஜ்ல வெச்சுப் பயன்படுத்துறாங்க. உங்க காலத்துல இன்ஸ்டன்ட் காபி வந்தாச்சு’’ - நினைவுகளை அசைபோட்டபடியே காபிக்கொட்டைகளை மெஷினில் அரைத்து மீண்டும் தன் காலத்துக்குள் நுழைந்து மகிழ்ந்தனர் பாட்டிகள்.

``நாங்க எல்லோரும் குழந்தைங்களா இருந்தபோது வாரத்துல ஒருநாள், ரெண்டு நாள்தான் இட்லியோ, தோசையோ கிடைக்கும். இன்னிக்கு உங்களுக்கெல்லாம் மூணு வேளையும் தோசை கிடைக்குது. இதுதான் ஆட்டுக்கல்... இதுல இப்படி அரிசியையும் உளுந்தையும் போட்டு அரைப்பாங்க அம்மம்மா. பக்கத்துல உட்கார்ந்து கதை கேட்டுக்கிட்டே நான் மாவு தள்ளிவிடுவேன்...’’ - அம்மா சொன்னதை ஆச்சர்யத்துடன் பார்த்த அந்தக் குழந்தை, பதிலுக்குக் கேட்டதுதான் ஹைலைட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick