லவங்கப்பட்டை - அஹா... அதிசயம்!

அஞ்சறைப் பெட்டி டாக்டர் வி.விக்ரம்குமார்

‘மரம் உரித்துப் போட்ட பட்டைகள் அவை; நயமாகச் சுருண்டு உருண்டு காய்ந்த மரக்குச்சிகளைப்போல உருமாறியிருக்கும். ஆனால், அவற்றின் நறுமணம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும். அது என்ன?’ - இப்படியொரு வாசனைமிக்க விடுகதையைக் கேட்டால், நறுமணமூட்டிகளின் ரசிகர்களிடம் இருந்து ‘லவங்கப்பட்டை’ என்று பதில் வரும்.

சமையலில் மட்டுமன்றி வாசனைத் திரவியங்கள், மவுத் ஃப்ரெஷ்னர் எனப் பல்வேறு இடங்களில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது லவங்கப்பட்டை. பெரும்பாலான பற்பசைகளில் சேர்க்கப்படும் சகிக்கமுடியாத உள்பொருள் களின் சுவையை மட்டுப்படுத்த லவங்கப்பட்டைச் சாறு சேர்க்கப்படுவது பற்பசைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம். லவங்கப்பட்டையைப் புனிதமாகக் கருதி, கடவுளுக்குப் படைத்தனர் கிரேக்கர்கள். சாக்லேட் ரகங்களில் இந்தப் பட்டையைச் சேர்த்து நறுமணம் ஏற்படுத்துவது ஸ்பெயின் மக்களின் வாடிக்கை. நெதர்லாந்து திருவிழா உணவுகளில் ஒன்றான ‘ஸ்பெகுலாஸ்’ என்பதன் முக்கியப் பொருள் லவங்கப்பட்டை. மாதுளம் பழச்சாற்றை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் ‘கோரெஸ்ட்’ எனும் இரான் உணவிலும் பட்டை இடம்பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick