செல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

ப்பப்பா, எவ்வளவு தூரம் பயணித்துவிட்டோம்! நம் பாட்டியின் தலைமுறைக்கும் நம் தலைமுறைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு? சதி, பெண் சிசுக் கொலை போன்ற பெயர்களில் அரங்கேறிய பல கொடுமைகள் எல்லாம் இன்றில்லை. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்த விந்தை மனிதர்கள் மாய்ந்துவிட்டனர்.

80 வயதான நம் பாட்டிகூட ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டினைப் பெண்களின் நிதி மேம்பாட்டு வருடமாக அறிவித்திருந்தது. அரசாங்கமும் சுகன்யா சம்ருதி, மஹிளா இ ஹாத் என்றெல்லாம் மகளிருக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறது.

எதற்காக இந்தப் பயணம்?

உலக அளவில் 66% வேலைகளைப் பெண் கள் செய்தாலும், வெறும் 1-2% சொத்துகளே நம் பெயரில் இருக்கிறது. அப்புறம் எப்படி நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும்? 

நமது சுறுசுறுப்பு, ஒழுக்கம், கெட்டிக்காரத் தனம் எல்லாம் வீட்டளவில்  மட்டும்தானா? ஆறை நூறாக்கும் திறமையை நாம் ஏன் வீணாக்குகிறோம்? வீடு, வங்கிக் கடன், ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற புதிய விஷயங்களை நாம் செய்யத் தயங்குகிறோமே, ஏன்?

`இருக்கிற வேலை போதாதா, இது வேறயா?' என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick