ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மே 29-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

 மேஷம்  எதிர்பாராத பண வரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். விலகிச் சென்ற சொந்தங்கள் தேடி வந்து உதவுவார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரம்: பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் புகழ்பெறுவீர்கள்.

உத்தியோகம்: சவாலான பணிகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள்.

உங்களின் நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும்.


 ரிஷபம்  உங்களின் திறமை அதிகரிக்கும். பழைய நகைகளைக் கொடுத்து நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். வீடு மாற்றம், இட மாற்றம் ஒரு சிலருக்குத் தவிர்க்க முடியாமல் போகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரம்: விற்பனையாகாமல் இருந்த சரக்குகள் யாவும் இப்போது விற்றுத் தீரும்.

உத்தியோகம்: உங்கள் மதிப்பு உயரும். கௌரவப் பதவி தேடி வரும்.

சாதுர்யமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick