தெய்வ மனுஷிகள் - கற்பகம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம் படம் : எல்.ராஜேந்திரன்

ற்பகத்துக்குப் பாட்டிதான் எல்லாமே. அந்தத் தள்ளாத வயசுலயும் தன் பேத்திக்காக அந்தக் கெழவி படுற பாடு,  கொஞ்சநஞ்சமில்லே.

முண்டும் முகடுமாக மொந்தல் மலை. மலைக்கு மேல குட்டி குட்டியா நிறைய சுனைங்க. பச்சைப் பசுமையா ஊரைச்சுத்தி பெருங்காடு. கற்பகத்தோட அப்பங்காரனுக்கு வெறகு வெட்டுற வேலை. ஒருக்கா, காட்டுக்குள்ள வெறகு வெட்டிக்கிட்டு திரும்பும்போது கருநாகம் தீண்டிச் செத்துப்போனான். புருஷன் செத்த அஞ்சாறு மாசத்துல, ஒத்தைப்புள்ள கற்பகத்தைத் தனியா விட்டுப்புட்டு அம்மாகாரியும் போய்ச் சேர்ந்துட்டா. யாருமில்லாம தனிச்சு நின்ன கற்பகத்தை பாட்டிகாரிதான் தூக்கியாந்து வளத்தா. அம்மா அப்பா முகம்கூட மறந்து போச்சு கற்பகத்துக்கு. எல்லாமுமா இருந்தவ பாட்டிதான். அப்படி பேத்தியை உசுருக்கு உசுரா பாத்துக்கிட்டா கெழவி.

அது வெள்ளைக்காரன் காலம். எல்லாத் துக்கும் கட்டுப்பாடு. நாலஞ்சு ஆளுக சேர்ந்து நின்னு பேசிக்கிட்டிருந்தாக்கூட புடிச்சு செயில்ல போட்டுருவானுக.திடீர்னு ஊருக்குள்ள வர்ற தொரைங்க, பொண்டு புள்ளைகளை கிண்டல் பண்றது, ஆடு, கோழிகளை அடிச்சுத் திங்கிறது, ஆம்புளைகளை கட்டி வெச்சு உதைக்கிறதுன்னு அக்கிரமம் செஞ்சானுக. அதுலயும் அந்தச் சீமைக்கு ஆளாயிருந்த வெள்ளைக்கார தொரை இருக்கானே...  ரொம்பவே மோசமான ஆளு. அவன் வர்றான்னு தெரிஞ்சாலே பொண்டு புள்ளைகள்லாம் ஓடி ஒளிஞ்சிருங்க.

வெள்ளைக்காரனுக்குத் தெரியாமத்தான் காட்டுக்குள்ள போவணும். வெறகு எடுக்க, காட்டுப்பொருள் சேகரிக்க, கல்பாசி சுரண்ட, தேன்கூடு எடுக்கன்னு இப்பல்லாம் எதுக்காகவும் காட்டுக்குள்ள போவ முடியலே. வெள்ளைக்காரன் பாத்தா, எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டு, அடிச்சுத் தொரத்திருவான். ஒருக்கா, மூங்கிக்குச்சி வெட்டப்போன செந்தலையான் மவனை அடிச்சு கொன்னேபுட்டான் அந்த வெள்ளைக்காரத் தொரை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick