சதிலீலாவதி - நினைவோவியம்

விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

`சதிலீலாவதி பார்ட் 2' வெற்றிகரமா ஓடிட்டிருக்கே. அந்த டைரக்டர்  ஆனந்த், என் ஃப்ரெண்டு தெரியுமா? அவனுடைய அப்பா-அம்மா கதையைத்தான் எடுத்துவெச்சிருக்கான்" என  சந்தோஷ் பார்ப்பவரிடமெல்லாம் பெருமையடித்துக்கொண்டிருந்தான். ``நாமதான் அடுத்த வாரம் கோயம்புத்தூர் போறோமே. அப்படியே அவரைப் பார்த்தால் என்ன?'' என என் விருப்பத்தைச் சொன்னேன்.

கோவை போய் இறங்கி, வந்த வேலையை முடித்துக்கொண்டு ஆனந்த்திடம் அலைபேசியில் வாங்கிய முகவரியைத் தேடினோம். கொங்கு மண்டலத்தின் சிறப்பு என்னவென்றால், உதவி செய்யச் சொல்லி சாலையில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். நாங்கள் இளநீர்க் கடைக்காரர் ஒருவரைக் கேட்க, அவர் சீவிக்கொண்டிருந்ததை அப்படியே வைத்துவிட்டு வந்து சொன்னார். ``சக்திவேல் டாக்டர் வூடுதானுங்கோ? அப்படிக்கா போவோணும்.''

`ஆஹா, கொங்குத் தமிழ் வரவேற்பு கிடைத்து விட்டது' என நான் நினைத்ததுபோலவே சந்தோஷும் நினைப்பது அவன் முகத்தில் தெரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick