தெய்வ மனுஷிகள் - பாவாயி | Godly women - Bavayi - Aval Vikatan | அவள் விகடன்

தெய்வ மனுஷிகள் - பாவாயி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம்

குமாரசாமி ஊர்லயே பெரிய தலை. நிலபுலங்கள் நிறைய. சாதி சனங்களும் நிறைய. ஊருல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் இந்த மனுஷனைக் கேட்டுதான் நடக்கும். சண்டை, சச்சரவு எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற மனுஷன். ஆம்பள பொம்பளன்னு எல்லாரும் குமாரசாமியைக் கண்டா எந்திரிச்சு நிப்பாக. அப்படியொரு பேரு, புகழு, மருவாதி.

மத்தவங்க மாதிரியில்லை குமாரசாமி. யார் எது கேட்டாலும் இல்லேன்னு சொல்ல மாட்டாரு. தன் தோட்டத்துல வேலை செய்றவங்களுக்கு கைநிறைய கூலி கொடுப்பாரு. அது மட்டுமில்ல. ஊர்ப்பிள்ளைங்க படிக்கிறதுக்கு தன் சொந்தப்பணத்துல ஒரு பள்ளிக்கூடமே கட்டிவிட்டிருக்காரு. யாரும் பசின்னு வந்து நின்னுடக் கூடாது. உடனே வீட்டுக்குள்ளே கூப்பிட்டு, இருக்கிறதைப் போட்டு பசியாத்தி அனுப்புவாரு. தெய்வ பக்தியும் அதிகம். 

இவ்வளவு பேரும் புகழும் இருந்தாலும் குமாரசாமிக்குக் கல்யாணம் கூடி வரலே.  வயசு அம்பது ஆச்சு. குமாரசாமியோட ஆயி அப்பன் இருந்தவரைக்கும் ஊரு உறவெல்லாம் பொண்ணு தேடி ஓஞ்சுபோனாக. பாக்குற பொண்ணையெல்லாம் ஏதோவொரு காரணம் சொல்லி தட்டிக்கழிச்சுக்கிட்டே இருந்தாரு குமாரசாமி. பெத்தவங்களுக்குக் காரணம் புரியலே. கடைசியாதான் தெரிஞ்சுச்சு, அவரு மனசுல மலையாள சாமி கோயிலு பூசாரி மவ மீனாட்சி இருக்கான்னு. அவளையே நெனச்சுக்கிட்டு பாக்குற பொண்ணையெல்லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு மனுஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick