ராசிபலன்

ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்  சோம்பல் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். சொந்த பந்தங்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். 15-ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள் உண்டாகும்.

வியாபாரத்தில் கைவசம் இருந்த பொருள்கள் விற்பனையாகி, புதியவற்றுக்கு ஆர்டர் கொடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் வேலைக்கேற்ற ஊதியமும் பாக்கித் தொகையும் கிடைக்கும்.

புதிய சிந்தனையுடன் திட்டம் தீட்டுவீர்கள்.


 ரிஷபம்  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் பிரச்னைகள் தீரும். மனக்குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். செலவுகள் அதிகரிக்கும்; சேமிப்புகள் கரையும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாளுவீர்கள்.

அனுசரித்துப் போக வேண்டிய நேரமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick