சிரியாவிலிருந்து சமர்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

மர் யாஸ்பெக்கைப் பார்க்கப் பார்க்க சிரியர்களுக்கு வருத்தமும் அச்சமும் கோபமும் ஒருசேர சூழ்ந்துகொண்டன. `இந்தப் பெண் சிரியாவுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்? தினம் தினம் குண்டு வந்து விழுந்துகொண்டிருக்கும் இந்தத் தேசத்திலிருந்து தப்பியோடத் தான் எல்லோரும் விரும்புவார்கள். இவள் எதற்காகத் தன்னுடைய பாதுகாப்பான இருப்பிடத்தைவிட்டு வெளியேறி இங்கே மீண்டும் மீண்டும் வந்து நிற்க வேண்டும்?' இதுதான் வருத்தத்துக்குக் காரணம். அச்சத்துக்குக் காரணம், சமர் யாஸ்பெக் சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்பது தெரியவந்தால் ஆளும் ஆசாத் அரசு சும்மா விடாது. தேடிப்பிடித்து வேட்டையாடி சிறையில் தள்ளிவிடும். அல்லது காணாமல் ஆக்கிவிடக்கூடும். அல்லது கொன்றுவிடவே செய்யலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick