டிஷ் வாஷ் & ஹேண்ட் வாஷ் செலவும் குறைவு... கைகளுக்கும் பாதுகாப்பு!

நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : பா.காளிமுத்து

‘`வாழ்க்கையில தோற்றுப்போனாலோ, கையில நாலு காசு பார்க்கணும்னாலோ மட்டும்தான் வேலை பார்க்கணும்னு இல்லையே... என்னுடைய ஒவ்வொரு நாள் பொழுதையும் சுறுசுறுப்பாகவும் உபயோகமாகவும் கழிக்கணும்னு ஆசை. எனக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன். எல்லாரையும் நல்லபடியா செட்டில் பண்ணிக்கொடுத்துட்டேன். பேரன் பேத்திகள் பார்த்துட்டேன். அன்பான, அனுசரணையான கணவர் இருக்கார். 63 வயசுல இதையெல்லாம் தாண்டி என்ன வேணும்னு மத்தவங்களுக்குத் தோணலாம். ஆனா, உழைக்காத நாள் உபயோகமான நாளா கழியாதுங்கிறது என் எண்ணம். மனசுலயும் உடம்புலயும் தெம்பிருக்கிறவரைக்கும் உழைக்கணும்...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் புஷ்பாவதி தீனதயாளன். இந்த வயதிலும் ஹேண்ட் வாஷும் டிஷ் வாஷும் செய்வதில் செம பிஸி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick